உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

கோடம்பாக்கம் -

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்


சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல


ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல


ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

No comments:

Post a Comment