நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா
நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
---
செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்
தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே
முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கேறியும்
ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை
தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னன்ன சுகமய்யா தப்பாமல் தப்பை நீ செய்வாயா
---
ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே
மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா
குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே
கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா
கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்
இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்
கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே
என்னை நீ ஆடாமல் செய்யாதே
--
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா
ம்-ஹூம் ம்-ஹூம் இன்னும் கொஞ்ச .....
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment