உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

பள்ளிக்கூடம் - இந்த நிமிடம்

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

***

ஞாபக பறவை
ஓடுகள் உடைந்து
வெளியே தாவி பறக்கிறதே

நீயும் நானும்
ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில்
மிதக்கிறதே

ஆயிரம் சொந்தம்
உலகில் இருந்தும்
தனிமை என்னை
துரத்தியதே

உன்னை காணும்
நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையா
கிடக்கிறதே

இதயம் நொருங்குகிறேன்
இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே
இறப்பேனே கண்ணே

ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ

***
இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

***

கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த
திசை ஆகும்

உன் முகம் இருக்கும்
திசையே எந்தன்
கண்களில் பார்க்கும்
திசை ஆகும்

கோடையும் வாடயும்
இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்

உன்னுடன் இருக்கும்
காலத்தில் தானே
எந்தன் நாட்கள்
உருவாகும்

உந்தன் நிழல் அருகே
ஒய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை
இது காமம் இல்லை


தேகத்தை தாண்டியோ
மோகத்தை தாண்டியோ
உறவும் இது தானோ

***

இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?

இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?

இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

No comments:

Post a Comment