ஏலே
ஏலே லே லே லே
ஏலே
ஏலே லே லே லே
ஒத்த பன ஓரத்துல
செத்த நேரம் உன் மடியில்
தல வெச்சு சாஞ்சுக்கிறேன்
சங்கதிய சொல்லித்தறேன்
வாடி
நீ வாடி
பத்து கண்ணு பாலத்துல
மேச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ளே
கூச்சம் கீச்சம் தேவை இல்ல
வாடி
நீ வாடி
ஏ லே
ஏ லே லே லே லே
ஏ லே
ஏ லே லே லே லே
செவ்வழனி சின்ன கனி
உன்ன செறை எடுக்க போறேன்
வா நீ
ஐயாய்யோ
என் உசுருக்குள தீய வெச்சான்
ஐயாய்யோ
என் மனசுக்குள நோய தெச்சான்
ஐயாய்யோ
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுன்டெலியா ஆனேன் புள்ளே
நீ கொன்ன கூட குத்தமில்ல
நீ சொன்ன சாகும் இந்த புள்ளே
ஐயய்யோ
என் வெக்கம் வத்தி வெகுறதே
ஐயய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
ஐயய்யோ
அரளி வெத வாச காரி
ஆள கொல்லும் பாசக்காரி
என் உடம்ப நெஞ்சக்கிறி
நீ உள்ள வந்த கெட்டிகாரி
ஐயய்யோ
என் இடுப்பு வெட்டி எரங்கி போச்செ
ஐயய்யோ
என் மீச முறுக்கும் மடங்கி போச்செ
ஐயய்யோ
கல்லுக்குள தேரப்போலே
கலஞ்சிருக்கும் தாடிக்குலே
ஒளிஞ்சிக்கவா
கல சுத்தும் நெழலப்போலே
பொட்ட காட்டில் உன்கூடவெ
தங்கிடவா
ஓ ஹோ...
அய்யனார பாத்தலே உன் நெனப்புதாண்டா
அம்மி கல்லும் பூ போல மாறி போச்செ ஏண்டா
நான் வாடமல்லி நீ போட அள்ளி
தொரட்டி கண்ணு கருவாச்சியே
நீ தொட்ட அருவ கரும்பாகுதே
ஏ தொரட்டி கண்ணு கருவாச்சியே
நீ தொட்ட அருவ கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுன்டெலியா ஆனேன் புள்ளே
நீ கொன்ன கூட குத்தமில்ல
நீ சொன்ன சாகும் இந்த புள்ளே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment